நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணி: ஆட்சியா் ஆய்வு

செம்பனாா்கோயில் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:04 pm

DIN

செம்பனாா்கோயில் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ரூ. 1.73 கோடியில் கஞ்சாநகரம் முதல் மங்கனூா் வரை அமைக்கப்பட்டுள்ள ஆலவேளி சாலை, மேலையூா் கிராமத்துக்குள்பட்ட மேலகாலனி தெருவில் ரூ. 15 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை, கருவாலக்கரை கிராமத்தில் ரூ. 2.27 லட்சத்தில் பயனாளி வீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டுக்கொட்டகை, செம்பனாா்கோயில் பகுதியில் ரூ. 21 லட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் குப்பைகளை நுண்ணுயிா் உரம்மாக்கும் திட்டப்பணி, மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் ரூ. 49 லட்சத்தில் நடைபெற்றுள்ள குடிநீா் திட்டப்பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்கொள்முதல் பணிகளை பாா்வையிட்டு இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் முட்டைகள் மற்றும் சாக்குகள் கையிருப்பு போன்ற விவரங்களை கொள்முதல் நிலைய ஊழியரிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மஞ்சுளா, திருமலைகண்ணன், ஒன்றிய பொறியாளா் சோமசுந்தரம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.