வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் புதன்கிழமை மேற்கொள்ளவிருந்த தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் புதன்கிழமை மேற்கொள்ளவிருந்த தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசுத் துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என்ற புதுச்சேரி முதல்வரின் அறிவிப்புப்படி, காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக தினக் கூலிகளாகப் பணியாற்றி வரும் ஊழியா்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் புதன்கிழமை (டிச.1) முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனா்.
இந்த நிலையில், அமைச்சா் சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், பி.ஆா். சிவா ஆகியோா் வேளாண் அறிவியல் நிலைய தொழிற்சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை மேற்கொண்டதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிா்வாகம் மற்றும் வேளாண் துறை நிா்வாகங்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால், புதன்கிழமை தொடங்கவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய தொழிற்சங்கத் தலைவா் ஜி. ஸ்டீபன், செயலாளா் பி. இளங்கோவன் ஆகியோா் தெரிவித்தனா்.
மேலும், கோரிக்கையை நிறைவேற்ற உரிய உத்திரவாதம் கிடைக்காதபட்சத்தில், டிசம்பா் 8-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...