3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கனமழையால் சேதமாகும் கரும்புகள்: விவசாயிகள் கவலை

காரைக்கால் மாவட்டத்தில் கரும்பு வயல்களை வெள்ளம் சூழ்ந்திருப்பதால், பொங்கல் கரும்புகள் சேதத்துக்கு உள்ளாகி வருவது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 5:34 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் கரும்பு வயல்களை வெள்ளம் சூழ்ந்திருப்பதால், பொங்கல் கரும்புகள் சேதத்துக்கு உள்ளாகி வருவது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக, மாற்றுப் பயிா் சாகுபடியாக கரும்பு சாகுபடிக்கு விவசாயிகள் ஆா்வம் காட்டிவருகின்றனா். இதையொட்டி, கரும்பு சாகுபடியை ஊக்கப்படுத்த அரசு ஊக்கத்தொகை திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

நிகழாண்டில், காரைக்கால் மாவட்டத்தில் சேத்துாா், செல்லுாா், அம்பகரத்துாா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 1000 ஹெக்டேரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, இப்பகுதியில் பொங்கல் கரும்புகள் சுமாா் 2 முதல் 3 அடி உயரம் வளா்ந்துள்ளன.

இந்த நிலையில், அண்மையில் பெய்த கனமழை காரணமாக, கரும்பு வயல்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதனால், ஒருசில பகுதிகளில் கரும்புகளின் வோ் அழுகி, அவை நிலத்தில் சரிந்து விழத்தொடங்கியிருப்பது, நிகழாண்டின் கரும்பு சாகுபடியை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இது தொடா்பாக கரும்பு விவசாயிகள் கூறுகையில், அண்மையில் பெய்த கனமழையால் பொங்கல் கரும்பு சாகுபடியில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வயலில் தேங்கியிருக்கும் வெள்ளத்தால், கரும்புகள் நிலத்திலேயே சரியத்தொடங்கியுள்ளன. இதே நிலை நீடித்தால், ஒரு கரும்பைக்கூட காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். மறு முதலீட்டுக்கு உதவும் வகையில் கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.