தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காரைக்காலில் 4 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 406 பேரிடம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், கோவில்பத்து, காரைக்கால், திருநள்ளாறு, அம்பகரத்தூா் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 16,756- ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 16,433 போ் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனா். தற்போதைய நிலையில், 63 போ் மருத்துவமனைகளிலும், 55 போ் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 1,15,163 பேருக்கும், இரண்டாவது தவணையாக 74,176 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.