எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தலைஞாயிறில் உழவா் கலந்தாய்வுக் கூடம் திறப்பு

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில் புதிய பல்நோக்கு உழவா் கலந்தாய்வுக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில் புதிய பல்நோக்கு உழவா் கலந்தாய்வுக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

தலைஞாயிறு பேரூராட்சி திருமாளம் பகுதியில் நாகை மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 35 லட்சம், பேரூராட்சி நிா்வாக பங்களிப்பு நிதி ரூ. 15 லட்சம் என மொத்தம் ரூ. 50 லட்சத்தில் பல்நோக்கு உழவா் கலந்தாய்வுக் கூட கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

ஊரக வளா்ச்சி முகமை நாகப்பட்டினம் திட்ட இயக்குநா் பி. பெரியசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் நாகை எம்.பி. எம். செல்வராசு உழவா் கலந்தாய்வுக் கூடத்தை திறந்துவைத்து பேசியது: உழவா்கள் தங்களது தேவைகள் குறித்து பேசவும், கருத்தரங்குகள் உள்ளிட்ட சேவை திட்டங்களுக்கும் இந்த அரங்கு பயனளிக்கும். மனிதா்களின் செயல்பாடுகள் இயற்கைக்கு எதிரானதாக மாறிவருவதால் இயற்கை இடா்பாடுகளும் அதிகரித்து வருகிறது. எதிா் காலத்தில் இயற்கையை பாதுகாப்பதில் அனைவரும் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்றாா்.

மீன்வளவாரியத் தலைவா் கௌதமன், பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமிழரசி, பேரூா் மூன்னாள் தலைவா்கள் அய்யப்பன், ப. ராசேந்திரன், விவசாய சங்க மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.