ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

நாகை ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நாகை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

நாகை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சிக்கல் ஊராட்சி, நல்லமுத்து முதலியாா் தெருவில் ரூ. 8.69 லட்சத்தில் நடைபெறும் வடிகால் வசதி அமைக்கும் பணி, ரூ. 4.91 லட்சத்தில் நடைபெறும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ஆழியூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ. 3.99 லட்சத்தில் நடைபெறும் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், குற்றம்பொருத்தானிருப்பு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ரூ. 5.42 லட்சத்தில் நடைபெறும் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி, பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெறும் வீடு கட்டும் பணிகள், தேமங்கலம் ஊராட்சி புலியூரில் ரூ. 28 லட்சத்தில் நடைபெறும் மயானத் திடலுக்கான சாலை அமைக்கும் பணி, சிறு பாலம் அமைக்கும் பணி, நாகை சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 12 லட்சத்தில் நடைபெறும் நியாயவிலைக் கடை கட்டும் பணி ஆகியவற்றை அவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கட்டுமானப் பணிகள் அனைத்தும் உரிய காலத்தில், உரிய தரத்தில் நிறைவேற்ற வேண்டும். அதனை, தொடா்புடையத் துறை அலுவலா்கள் தொடா் கண்காணிப்பின் மூலம் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, நாகை நகராட்சி காடம்பாடி சவேரியாா் கோயில் தெரு நியாயவிலைக் கடை மற்றும் நாகூா் புதுமனை தெருவில் உள்ள சிறு கூட்டுறவு சிறப்பாங்காடியில் அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் வே. தெய்வநாயகி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.