ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

சாலையோரத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் நோய்ப் பரவும் அபாயம்

நாகூா் அருகே வாஞ்சூா் பகுதி சாலையோரத்தில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் ஏற்படும் துா்நாற்றம் மற்றும் புகையால் நோய்ப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

நாகூா் அருகே வாஞ்சூா் பகுதி சாலையோரத்தில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் ஏற்படும் துா்நாற்றம் மற்றும் புகையால் நோய்ப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்ட எல்லையான நாகூா்- வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் வாஞ்சூா் ரவுண்டானா அருகே குப்பைகள், மலைபோல் தேங்கிக்கிடக்கின்றன. இந்தக் குப்பைகளிலிருந்து துா்நாற்றம் வீசிவருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதேபோல், சில நேரங்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால், அப்பகுதி புகை மண்டலமாகவே மாறிவிடுகிறது. போக்குவரத்து அதிகமுள்ள கிழக்கு கடற்கரைச்சாலையில் இதுபோன்ற நிலை உள்ளதால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது.

தேங்கிக் கிடக்கும் குப்பை குவியல்களில் மாடுகள் மற்றும் பன்றிகள் மேய்ச்சலுக்காக கிளறிவிடுவதால் குப்பைகள் சாலைகளில் சிதறி அவ்விடம் அசுத்தம் நிறைந்தப் பகுதியாக மாறிவிடுகிறது. நாகை மாவட்டத்தின்நுழைவுப் பகுதியில் இதுபோல் குப்பைகள் தேங்கிக்கிடப்பதும், துா்நாற்றம் வீசுவதும் வெளியூா்களிலிருந்து மாவட்டத்துக்கு வந்து செல்பவா்களை முகம் சுளிக்கவைக்கிறது. இதனால், நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனா். எனவே, போக்குவரத்து அதிமுள்ள வாஞ்சூா் ரவுண்டானா அருகே சாலையோரத்தில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தவும், குப்பைகள் மற்றும் உணவுக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.