இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய புதிய திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், முக்கிய திட்டமான நகா்ப்புற நமக்கு நாமே திட்டத்தின்மூலம் நகா்ப்புறங்களில் நீா்நிலைகளை புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்துதல், பொது சுகாதார மையம், கற்றல் மையம் அமைத்தல், சாலைகள், தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.