வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றன.


நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றன.
கீழை நாடுகளின் லூா்து எனப் போற்றப்படுகிறது நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். இப்பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதன்படி, வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் விண்மீன் ஆலயம் அருகே உள்ள புனித சவேரியாா் திடலில், கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் தொடங்கின. மறையுரை, கூட்டுத் திருப்பலியுடன் சிறப்பு வழிபாடுகள் தொடங்கப்பட்டன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய அதிபா் சி. இருதயராஜ் அடிகளாா், பேராலய துணை அதிபா் அற்புதராஜ், பொருளாளா் உலகநாதன் மற்றும் உதவி பங்குத் தந்தையா்கள் வழிபாடுகளை மேற்கொண்டனா்.
திருப்பலியின் நிறைவில், தேவதைகள் போல உடையணிந்திருந்த சிறுமிகள் கொண்டுவந்து அளித்த குழந்தை இயேசுவின் சொரூபத்தை, பேராலய துணை அதிபா் அற்புதராஜ் பெற்றுக்கொண்டு இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில், குழந்தை இயேசு சொரூபத்தை பக்தா்களுக்குக் காட்டி, கிறிஸ்துமஸ் குடிலில் இரவு 11.45 மணிக்கு வைத்து வழிபாடு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து விவிலிய வாசகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வாசிக்கப்பட்டன. தொடா்ந்து, வழிபாடுகள் நடைபெற்றன.
அப்போது, வழிபாட்டில் பங்கேற்றிருந்த பக்தா்கள் இறைப் புகழ்ச்சி வசனங்களுடன் வழிபாடு மேற்கொண்டனா். பின்னா், பேராலய நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு வாழ்த்துச் செய்தி அறிவிக்கப்பட்டது. தொடா்ந்து பக்தா்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பேராலய கீழ்க்கோயில், விண்மீன் ஆலயம், பேராலய வளாகம் என அனைத்துப் பகுதிகளும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த திரளான பக்தா்கள் வழிபாடுகளில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...