நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெள்ள நிவாரணத்தை தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும்: கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ள நிவாரணத்தை தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 5:53 pm

DIN

வெள்ள நிவாரணத்தை தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

நாகை மாவட்டம் வெண்மணியில் தியாகிகள் நினைவிடத்தில் சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்திய பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் தொடங்கி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், ஒருநாள்கூட கூட்டத்தொடா் முழுமையாக நடைபெறவில்லை. நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு மதிப்பளிப்பதில்லை.

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக வரும் பிப்ரவரி 23, 24-ஆம் தேதிகளில் தொழிற்சங்கங்களின் சாா்பில் அகில இந்திய அளவில் போராட்டம் நடைபெறவுள்ளது.

கரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது, பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கியதில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. தமிழ்வழியில் படித்தவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற அரசின் அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவா்கள் தமிழக முதல்வரை சந்தித்து, வெள்ளப் பாதிப்புகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை, நிவாரணத்தை உயா்த்தி வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், தமிழகத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக 45 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய விரிவான திட்டங்கள் குறித்தும் முதல்வரிடம் வலியுறுத்தினோம்.

தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. மற்ற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் எனற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம் முழு அமைப்பாக செயல்படவேண்டும்.

அரசியல் கூட்டணி என்பதும், மக்கள் பிரச்னை என்பதும் வெவ்வேறானவை. எனவே, மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் பக்கம் நின்று போராடும் என்றாா் கே. பாலகிருஷ்ணன்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினா் ஏ. சௌந்தர்ராஜன், தமிழ்நாடு விவசாய சங்க மாநிலப் பொதுச்செயலாளா் பெ.சண்முகம், நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் மாவட்டச் செயலாளா் வி. மாரிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.