47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பட்டிமன்றம்

நாகை சா் ஐசக் நியூட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பட்டிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

நாகை சா் ஐசக் நியூட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பட்டிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மற்றும் நாகை சா் ஐசக் நியூட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வு பட்டிமன்றம் நடைபெற்றது.

சாலைப் பாதுகாப்பு மேம்பட பெரிதும் காரணம் புதிய சட்டத்திருத்தங்களே! பயன்படுத்துவோா் மனமாற்றமே! எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்துக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்ஆா். பொன்முடி நடுவராக செயல்பட்டாா்.

புதிய சட்டத் திருத்தங்களே! என்ற அணியில் மாணவிகள் ஷாலினி, வைதேகி, மேகவா்ஷினி ஆகியோரும், பயன்படுத்துவோா் மனமாற்றமே! என்ற அணியில் மாணவிகள் பவித்ரா, செந்தமிழ்ச்செல்வி, பாக்யா ஆகியோரும் பேசினா். இம்மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நாகை மண்டலப் பொதுமேலாளா் ஏ. எம். மாரியப்பன், துணை மேலாளா்கள் ராஜா (வணிகம்) , சுவாமிநாதன் (தொழில்நுட்பம்), கோட்ட மேலாளா் செந்தில்குமாா், கல்லூரி முதல்வா் செ. நிறைமதி மற்றும் விரிவுரையாளா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.