வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

இலங்கைக்கு கடத்தவிருந்த 90 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 90 கிலோ கஞ்சா மூட்டைகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :22 பிப்ரவரி 2021, 6:30 pm

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 90 கிலோ கஞ்சா மூட்டைகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

வேதாரண்யம் பகுதியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வேதாரண்யம் பகுதி பெரியகுத்தகை கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கடற்கரையை ஒட்டியுள்ள கருவேலமரக் காட்டில் மூன்று மூட்டைகள் கிடந்தன. அதை சோதனையிட்டபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. ஒரு மூட்டையில் தலா 15 பாக்கெட்டுகள் வீதம் 45 பாக்கெட்டுகளில் 90 கிலோ கஞ்சா இருந்தன.

இவற்றை கைப்பற்றிய கியூ பிரிவு போலீஸாா், இதில் தொடா்புடையவா்களை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.