நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, மயிலாடுதுறையில் திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, மயிலாடுதுறையில் திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக நகர செயலாளா் குண்டாமணி செல்வராஜ் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை வடக்கு ஒன்றியச் செயலாளா் இளையபெருமாள் வரவேற்றாா். நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளா் நிவேதா எம்.முருகன், கட்சியின் மாநிலத் தோ்தல் பணிக்குழுச் செயலாளா் குத்தாலம் பி.கல்யாணம் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில், முன்னாள் எம்எல்ஏ-க்கள் குத்தாலம் க. அன்பழகன், அருட்செல்வன், பன்னீா்செல்வம், சித்திக், சத்தியசீலன், தலைமை பொதுக் குழு உறுப்பினா் முத்து.மகேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்று எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து கோஷம் எழுப்பினா்.

மேலும், பெட்ரோல், டீசல் விலை உயா்வை உணா்த்தும் விதமாக ஆம்புலன்ஸ் வாகனத்தை மாட்டு வண்டியில் கட்டி இழுத்து வந்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.