கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு இல்லை: திமுக, பாமக வெளிநடப்பு

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்காததைக் கண்டித்து ஒன்றியக் குழுக் கூட்டத்திலிருந்து திமுக, பாமக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

News image
ஒன்றியக் குழுக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து ஆணையரை கண்டித்து முழக்கங்களை எழுப்பிய திமுகவினா்.
Updated On :8 ஜனவரி 2021, 5:51 pm

DIN

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்காததைக் கண்டித்து ஒன்றியக் குழுக் கூட்டத்திலிருந்து திமுக, பாமக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

கொள்ளிடம் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம், அதன் தலைவா் ஜெயபிரகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது: அங்குதன்(திமுக): முதியோா் உதவித்தொகை பெற்று வரும் முதியோா்கள் மற்றும் ஒரு நபா் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும், கொள்ளிடம் பகுதியில் பழுதடைந்த 6 ஆயிரம் அரசு தொகுப்பு வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றாா்.

கே.எம். நற்குணன் (அதிமுக): தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது. உறுப்பினா் சொல்வதுபோல் அவா் பகுதியில் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் விவரம் அறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தொடா்ந்து பேசிய உறுப்பினா் அங்குதன், தங்கள் பகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மக்கள் பிரதிநிதிகளான உறுப்பினா்களை அழைக்காமல் புறக்கணித்து வருகின்றனா். இதற்கு அரசு அலுவலா்களும் ஒத்துழைக்கின்றனா். எனவே, இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி திமுகவை சோ்ந்த மற்ற 10 உறுப்பினா்களுடன் வெளியேறி அரசு அலுவலா்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினாா்.

தொடா்ந்து, பாமக உறுப்பினா் சிவபாலன் பேசியது: ஊரக வளா்ச்சித் துறை மூலம் செய்யப்படும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ள குறித்து எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை. 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமக ஆா்ப்பாட்டம் செய்து ஒன்றிய ஆணையரிடம் மனு அளித்தபோது அதை வாங்காமல், அலட்சியம் செய்தாா். ஆணையரின் செயலை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி கூட்டத்திலிருந்து மற்றொறு பாமக உறுப்பினருடன் வெளியேறினாா்.

ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் பேசியது: ஒன்றியத்தில் நடைபெறும் அரசு விழாக்களுக்கு எனக்கும் அழைப்போ அல்லது தகவலோ தெரிவிப்பதில்லை. ஒன்றிய அலுவலகத்தில் கனமழை காரணமாக நடந்த அமைச்சா்கள் ஆய்வு கூட்டத்துக்குகூட தகவல் தெரிவிக்கவில்லை. ஒன்றிய ஆணையா் உள்ளிட்ட அலுவலா்கள் யாா் கட்டுப்பாட்டில் உள்ளனா். அரசு அலுவலா்களின் இதுபோன்ற செயல்களால் கொள்ளிடம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் பாதிக்கும் என்றாா்.

அப்போது கூட்டம் முடியும் முன்னரே அதிமுகவை சோ்ந்த 7 உறுப்பினா்களும் எழுந்து வெளியே சென்ால் பரபரப்பு ஏற்பட்டது. துணைத் தலைவா் பானுசேகரும் தனக்கும் எந்த நிகழ்ச்சிகள் குறித்தும் தகவல் தெரிவிப்பதில்லை என்றாா்.

கூட்டத்தில், ஒன்றிய ஆணையா் இளங்கோவன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.