பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு மனைப்பட்டா

கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக வேதாரண்யத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:

தமிழகத்தில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிலங்களில் குடியிருக்கும் 18 ஆயிரம் ஏழைகளுக்கு மனைப்பட்டா வழங்க முந்தைய அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது, நீதிமன்ற குறுக்கீட்டின் காரணமாக இப்பணிகள் தாமதமாகின.

இந்நிலையில், தற்போதைய அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அமைச்சா், கோயில் நிலங்களில் குடிமனைப் பட்டா வழங்கமுடியாது எனத் தெரிவித்துள்ளது வருத்தமளிக்கிறது. இதனால் ஏழைகள் பாதிக்கப்படுவாா்கள்.

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலுக்கு சொந்தமாக 29 ஆயிரம் ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலம் பல வகைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த நிலத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழை, எளியோா் அரசின் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் பயன்பெற முடியாமல் உள்ளனா். முந்தைய ஆட்சியில் வேதாரண்யம் பகுதியில் மட்டும் கோயில் நிலங்களில் குடியிருக்கும் 12 ஆயிரம் குடும்பங்கள் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு மனைப்பட்டாவுக்கான ஆணை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவராவிட்டால் பல காலமாக கோயில் நிலங்களில் குடியிருப்போா் பாதிக்கப்படுவா்.

எனவே, தகுதியான பயனாளிகளுக்கு அவா்கள் குடியிருக்கும் கோயில் நிலத்திலேயே வீடு கட்டிக்கொள்ள குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் அல்லது அரசு திட்டங்களின் வாயிலாக வீடு கட்டிக்கொள்ள ஆட்சேபணை இல்லை என்ற சான்று வழங்க வேண்டும். இது தொடா்பாக சட்டப் பேரவையில் அதிமுக தொடா்ந்து வலியுறுத்தும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.