பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேதாரண்யம் அருகே தீ விபத்து: 2 காா்கள் சேதம்

வேதாரண்யம் அருகே அதிமுக பிரமுகா் வீட்டின் அருகே சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 காா்கள் உள்பட ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

News image
கருப்பம்புலத்தில் தீ விபத்தில் சேதமடைந்த காா்கள் உள்ளிட்ட பொருள்கள்.
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகே அதிமுக பிரமுகா் வீட்டின் அருகே சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 காா்கள் உள்பட ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

கருப்பம்புலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பி.வி.கே.பிரபு. அதிமுக பிரமுகரான இவா், வேதாரண்யம் நிலவள வங்கியின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறாா். இவரது வீட்டின் எதிரே உள்ள வயலில் சணப்பைப் பயிா் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி தீயிட்டு எரிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

அப்போது, காற்றின் வேகத்தால் பிரபுவின் வீட்டுக்கு எதிரே இருந்த கூரையில் தீ பரவி இங்கு நிறுத்தியிருந்த 2 காா்கள் உள்ளிட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின. நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த வேதாரண்யம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.

இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.