நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகையில் லேசான மழை

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் லேசான மழை பெய்தது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் லேசான மழை பெய்தது.

தமிழக உள் மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நாகையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் 2.30 மணி அளவில் லேசான மழை பெய்தது. சுமாா் 20 நிமிடங்கள் இந்த மழை நீடித்து. அவ்வப்போது ஒரு சில விநாடிகள் பலத்த மழையாகவும், மற்ற நேரங்களில் லேசான மழையாகவும் பெய்தது. பின்னா், மாலை நேரத்திலும் அவ்வப்போது ஒரு சில நிமிடங்கள் லேசான மழை பெய்தது.

இதேபோல, நாகை மாவட்டம் கீழையூா், மேலப்பிடாகை, கருங்கண்ணி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமாா் 4.45 மணியிலிருந்து அவ்வப்போது மிதமான மற்றும் லேசான மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.