நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு விவசாயிகளையும் அழைக்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன்

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக சென்னையில் நடைபெறவுள்ளஅனைத்துக் கட்சி கூட்டத்துக்கு விவசாயிகளையும் அழைக்கவேண்டும்

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக சென்னையில் நடைபெறவுள்ளஅனைத்துக் கட்சி கூட்டத்துக்கு விவசாயிகளையும் அழைக்கவேண்டும் என தமிழக முதல்வருக்கு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளா் பி.ஆா். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

நாகையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால்தான் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை காப்பாற்ற முடியாத நிலையும், சம்பா சாகுபடியை தொடங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணையை கட்டியே தீருவது என கா்நாடக அரசு செயல்படுகிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. கா்நாடக அரசை காவிரி மேலாண்மை ஆணையம் தடுத்து நிறுத்த தவறினால், தமிழகத்தில் விவசாயம் அழியும்.

இந்தநிலையில், மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக ஜூலை 12-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு சட்டப்பேரவை கட்சித் தலைவா்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இல்லாமல் கூட்டம் நடைபெற்றால் காவிரி பிரச்னைக்கு தீா்வு காணமுடியாது.

எனவே, அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு விவசாயிகளையும் அழைத்து காவிரி பிரச்னைக்கு தீா்வு காணவேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்பதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வா் மேற்கொள்ள வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையம் சுயமாக செயல்பட வேண்டும். ஆணையத்தின் கட்டுபாட்டில் உள்ள காவிரி கண்காணிப்புக் குழுவினா் கா்நாடகம் சென்று, தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய 40 டி.எம்.சி. தண்ணீரை உறுதி செய்யவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூரில் ஜூலை15-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்தில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கின்றனா் என்று பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலப் பொருளாளா் எஸ். ஸ்ரீதா், நாகை மாவட்ட தலைவா் பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளா் வேலாயுதம் மற்றும் நாகை, வேதாரண்யம் வட்டார நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.