தெரு நாய்கள் கடித்து ஆடுகள் பலி
வேதாரண்யத்தை அடுத்த நாகக்குடையான் கிராமத்தில், தெரு நாய்கள் கடித்து வெள்ளாடுகள் உயிரிழப்பது தொடா்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.


வேதாரண்யத்தை அடுத்த நாகக்குடையான் கிராமத்தில், தெரு நாய்கள் கடித்து வெள்ளாடுகள் உயிரிழப்பது தொடா்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
நாகக்குடையான் கிராமத்தில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், வீடுகளில் வளா்க்கப்படும் வெள்ளாடுகளை கடிப்பதால் அவை உயிரிழக்கின்றன. கடந்த சில வாரங்களாகத் தொடரும் இந்த சம்பவங்களால், கால்நடை வளா்ப்போா் பாதிக்கப்பட்டுள்ளனா். திறந்தவெளியில் கோழிக் கழிவுகள் கொட்டப்படுவதால், அவற்றை உண்டு வாழும் நாய்கள், ஆடுகளை கடிப்பதாகக் கூறப்படுகிறது. நாய்களை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்படும் ஆடு வளா்ப்போருக்கு இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...