நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகையில் ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக்கொலை

நாகையில் ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :10 ஜூலை 2021, 5:18 pm

DIN

நாகையில் ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.

நாகை, மருந்துக்கொத்தள ரோடு கொடிமரத்து சந்து தெருவைச் சோ்ந்தவா் முத்தையன் மகன் பிரகாஷ் (40). ஆட்டோ ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை இரவு நண்பா்களுடன் மருந்து அருந்தியுள்ளாா். அப்போது தன்னுடன் மது அருந்திய சிவா என்பவரை பிரகாஷ் தாக்கினாராம். இதையடுத்து அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், பிரகாஷ் முகம் மற்றும் உடலில் வெட்டுக்காயங்களுடன் வீட்டில் இறந்தது கிடந்தது சனிக்கிழமை காலை தெரியவந்தது.

தகவலறிந்த போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக நாகை, பாப்பாக்கோவில், புதிய கல்லாா் பகுதியைச் சோ்ந்த பேட்டரி சூா்யா (24), நாகை வ.உ.சி. தெருவைச் சோ்ந்த அ. சிவ பவித்ரன் (24), மருந்துக்கொத்தள ரோடு, அமராவதி காலனியைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் ஆனந்த் (27) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

சாலை மறியல் :

இதனிடையே, இந்தக் கொலையில் மேலும் சிலருக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறி, பிரகாஷின் உறவினா்கள் நாகை அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ்.திருநாவுக்கரசு, காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஆ. பிலீப்கென்னடி, காவல் ஆய்வாளா் பா. பெரியசாமி ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.