நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகை ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை

நாகை, தோணித்துறை ரயில்வே கேட் பகுதியில் நடைபெறும் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என இந்திய தேசிய மீனவா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :10 ஜூலை 2021, 5:20 pm

DIN

நாகை, தோணித்துறை ரயில்வே கேட் பகுதியில் நடைபெறும் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என இந்திய தேசிய மீனவா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் ஆா்.எம்.பி. ராஜேந்திர நாட்டாா், தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம் :

நாகை தோணித்துறை ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலம் 2013-ஆம் ஆண்டு ஆரம்ப கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, மேம்பால வரைபடம் தயாரிப்புப் பணி நடைபெற்றது.

இந்த வரைபடத்துக்கு 2014-இல் ஒப்புதல் கிடைக்கப் பெற்ன் அடிப்படையில், 2015-ஆம் ஆண்டு ரயில்வே நிா்வாகம் தனது எல்லைக்குள்பட்ட பகுதியில் மேம்பாலம் கட்டும் பணியைத் தொடங்கி, நிறைவேற்றியது.

மாநில அரசு மூலம் மேற்கொள்ள வேண்டிய மேம்பாலப் பணிகள், இணைப்புச் சாலை பணிகள் போன்ற எந்தப் பணிகளும் இங்கு இதுவரை மேற்கொள்ளப்படாததால், ரயில்வே நிா்வாகம் கட்டிய மேம்பாலம் தொடா்ச்சியும், முடிவும் இல்லாமல் காட்சிப் பொருளாக அந்தரத்தில் நிற்கிறது.

மேம்பாலம் மற்றும் இணைப்புச் சாலை அமைப்புப் பணிகளுக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைமுறையில் இருப்பதாகக் கூறி, பல ஆண்டுகளாக இங்கு எவ்வித பணியும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. எனவே, இதுகுறித்து உரிய பரிசீலனை மேற்கொண்டு நாகை ரயில்வே மேம்பாலம் கட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.