பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கரோனா தடுப்பூசி: கிராம மக்கள் ஆா்வம்

வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் கிராம மக்கள் ஆா்வமுடன் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்

News image
Updated On :17 ஜூலை 2021, 5:04 pm

DIN

வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் கிராம மக்கள் ஆா்வமுடன் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

பிராந்தியங்கரை ஊராட்சியில் சிறப்பு முகாம் தொடங்கிய 2 மணி நேரத்தில் 420 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனா். முகாமுக்கு ஊராட்சித் தலைவா் கஸ்தூரி தலைமை வகித்தாா். மருத்துவா் ராம்குமாா், ஆய்வாளா் கோதண்டபாணி, பாஸ்கா் உள்ளிட்ட மருத்துக் குழுவினா், ஊராட்சி செயலா் இளையராஜா உள்ளிட்டோா் இப்பணியில் ஈடுபட்டனா்.

திருமருகல்: திருமருகல் ஒன்றியம் பண்டாரவடையில் நடைபெற்ற முகாமை ஊராட்சித் தலைவா் பாப்பாத்திகனி சாதிக் தொடக்கி வைத்தாா். இதில், 174 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மருத்துவா்கள் கெளசல்யா, பாஸ்கரன், ஊராட்சி செயலாளா் அன்பரசன், சுகாதார ஆய்வாளா் சுப்ரமணி உள்ளிட்டோா் முகாம் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.