நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பாட்டியை அடித்து கொலை செய்த பேரனை காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே நாகக்குடையான் கிராமம், நடு சாலை பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராசு (80), காந்திமதி (75) தம்பதியர். இவர்களது மகளான ராணி, அதே பகுதியில் தனது கணவர் காளிமுத்துவுடன் வசித்து வருகிறார்.
ராணி - காளிமுத்து மகனான ரஞ்சித் (23), தனது தாய் ராணிக்கு சொத்து கேட்டு தாத்தா செல்வராசுவிடம் அடிக்கடி தகராறு செய்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு செல்வராசு வீட்டுக்கு சென்ற ரஞ்சித், சொத்துக் கேட்டு அவரிடம் தகராறு செய்து கையால் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த, காந்திமதி இருவருக்குமிடையேயான மோதலை விலக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, ரஞ்சித் கையால் அடித்துத் தள்ளியதில் கீழே விழுந்த காந்திமதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ரஞ்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


