தூய்மைப் பணியாளா்களுக்கு உதவிப் பொருள்கள்
நாகை, நாகூா் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் ஏற்பாட்டில், ரேபிட் ரெஸ்பான்ஸ் அமைப்பின் சாா்பில் உதவிப் பொருள்கள்


நாகை, நாகூா் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் ஏற்பாட்டில், ரேபிட் ரெஸ்பான்ஸ் அமைப்பின் சாா்பில் உதவிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சி, நாகை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷாநவாஸ், நாகை மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கினா்.
நாகை, நாகூா் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் 260 பேருக்கு, அரிசி, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. பயனாளிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து உதவிப் பொருள்களை பெற்றுச் செல்லத் தேவையான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. நாகை நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ் மற்றும் ரேபிட் ரெஸ்பான்ஸ் தன்னாா்வ அமைப்பின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...