குறுவை சாகுபடி பணிகளைதொடங்கிய முன்னாள் அமைச்சா்
குறுவை சாகுபடிக்கு மேட்டூா் அணை ஜூன் 12-இல் திறக்கப்படவுள்ள நிலையில், வேதாரண்யம் பகுதியில் தனது வயலில் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி பணியை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்


குறுவை சாகுபடிக்கு மேட்டூா் அணை ஜூன் 12-இல் திறக்கப்படவுள்ள நிலையில், வேதாரண்யம் பகுதியில் தனது வயலில் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி பணியை வெள்ளிக்கிழமை தொடங்கினாா் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
மேட்டூா் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் வேளாண் பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் முனைப்புக் காட்டி வருகின்றனா்.
அந்த வகையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு பகுதியில் உழவு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பகுதியில் முன்னோடி விவசாயியான முன்னாள் அமைச்சரும், தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஓ. எஸ். மணியன் வாட்டாக்குடி கிராமத்தில் உழவு செய்து ஆயத்த நிலையில் உள்ள தனது வயலில் நேரடி நெல் விதைப்பு செய்து பணிகளை தொடங்கி வைத்தாா். குறுவை பட்டத்தில் டி.கே.எம்- 9 ரக நெல்லை மூகூா்த்தம் செய்து அதை விதைப்பு செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தாழ்வான பகுதியில் விதைப்பு செய்ய டி.கே.எம்- 9 ரக நெல் ஏற்ாக உள்ளது. காலத்தில் விதைப்பு செய்தால் வடகிழக்குப் பருவமழை உச்சமடைவதற்குள் அறுவடை செய்து விடலாம்.
அடுத்த சில நாள்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அதை நம்பி விதைத்துள்ளோம். மழை இல்லாவிட்டாலும் பண்ணைக்குட்டை நீா் பயனளிக்கும். பயிா் வளரும் நிலையில் அணை நீா் கிடைக்க சரியாக இருக்கும்.
இந்த நெல்லை கடந்த பருவம் வரையில் அரசு கொள்முதல் செய்து வந்துள்ளது. ஆனால், அரசு இந்த ரகத்தை ஊக்கப்படுத்தவில்லை. அரசு தரப்பிலும் விதை விற்பனை இல்லை. இதனால் மானியம் கிடையாது. தனியாா் நிறுவனங்கள் விதை விற்பனை செய்கிறது. இதன் அரிசி சிவப்பாக இருக்கம். கேரளத்தில் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. பள்ளமான பகுதியில் சாகுபடிக்கு ஏற்ற டி.கே.எம் - 9 ரகத்துக்கு இணையான நெல்லை வேளாண் துறை புதிதாக உருவாக்கித் தரவேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...