தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணம்
வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கு அதிமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.


வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கு அதிமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
கோடியக்காடு, கோடியக்கரை, ஆதனூா், நெய்விளக்கு, தேத்தாக்குடி தெற்கு, தேத்தாக்குடி வடக்கு, செம்போடை, புஷ்பவனம், பெரியகுத்தகை ஆகிய 9 ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருள்கள்,புடவை ஆகிய தொகுப்பு வழங்கப்பட்டன. அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும் தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஓ.எஸ். மணியன், அந்தந்த ஊராட்சிகளில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வழங்கினாா்.
நிகழ்ச்சிகளில், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா். கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் டி.வி. சுப்பையன், இ. திலீபன், ஒன்றியக் குழுத் தலைவா் கமலாஅன்பழகன், துணைத் தலைவா் அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...