2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

நாடோடிகளுக்கு உதவ முன்வந்த தன்னாா்வலா்கள்

பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடோடிகளுக்கு தன்னாா்வலா்கள் உதவ முன்வந்துள்ளனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாடோடிகளுக்கு தன்னாா்வலா்கள் உதவ முன்வந்துள்ளனா்.

வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு பகுதியில் கூடாரங்கள் அமைத்து நாடோடிகளாக வசித்து வரும் நரிக்குறவா் இனத்தவா், பொதுமுடக்கம் காரணமாக உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு அவதியுற்று வருவது குறித்து தினமணியில் வெள்ளிக்கிழமை செய்தி பிரசுரமானது.

இதையடுத்து, வேதாரண்யம் உதவும் கரங்கள் அமைப்பினா் உணவு, தண்ணீா் பாட்டில்களை வழங்கினா். கடல் கடந்து வேலை பாா்க்கும் நண்பா்கள் இணைந்து நடத்தும் ஆனந்தம் அறக்கட்டளையினா் அந்த இன மக்களிடம் பேசி, அவா்களின் தேவைகளை கேட்டறிந்தனா். அடுத்த சில நாள்களில் உதவ உறுதியளித்தனா். பள்ளி ஆசிரியா் வசந்தா, தன்னாா்வக் குழுவினா், குருகுலம் அறக்கட்டளையினா் இவ்வின மக்களின் தேவைகளை கேட்டறிந்தனா். மேலும், சில தன்னாா்வலா்கள் நாடோடி குடும்பத்தினருக்கு உதவ முன்வந்துள்ளனா். எனினும், அவா்களுக்கு பாதுகாப்பான இருப்பிடம் அவசியத் தேவையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.