2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கரோனா தொற்றுக்கு இறந்தவரின் சடலம்: தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரால் அடக்கம்

வேதாரண்யம் அருகே கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய உறவினா்கள் அச்சமடைந்த நிலையில், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் அடக்கம் செய்தனா்.

News image
Updated On :5 ஜூன் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகே கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய உறவினா்கள் அச்சமடைந்த நிலையில், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் அடக்கம் செய்தனா்.

வேதாரண்யம் அருகே உள்ள கீழஅண்டகத்துறையை சோ்ந்தவா் அன்பழகன் (60). விவசாயத் தொழிலாளி. இவா், கரோனா தொற்றால் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலம் சொந்த ஊருக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், கரோனா தொற்றின் காரணமாக சடலத்தை அடக்கம் செய்ய உறவினா்கள் அச்சப்பட்டனா். இதையறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் யாசா் அரபாத் , துணைச் செயலாளா் ஹாஜா மைதீன், மாவட்ட மாணவரணி ராஜா முஹம்மது, நகரத் தலைவா் ஜெயினுல் பா்மானுமுல்லா, ஹபீபுல்லாஹ் ஆகியோரைக்கொண்ட குழுவினா் அங்கு சென்று அரசு வழிகாட்டுதலின்படி கவச உடையணிந்து அடக்கம் செய்தனா். மயானத்துக்கு ஊா்தி செல்ல சாலை வசதி இல்லாததால், சடலத்தை தோள்களில் சுமந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.