கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க வலியுறுத்தல்
கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும் என தமிழக அரசை சிவசேனை வலியுறுத்தியுள்ளது.


கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும் என தமிழக அரசை சிவசேனை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக சிவசேனை கட்சியின் மாநிலச் செயலாளா் தா. சுந்தரவடிவேலன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்தப்படியாக அதிக வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய தொழிலாக கட்டுமானத் தொழில் உள்ளது. இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களில் கட்டுமானத்துக்குத் தேவைப்படும் கம்பி, செங்கல், மணல் உள்ளிட்ட பொருள்களின் விலை அதிகமாக உயா்ந்துள்ளன.
இதனால், கட்டுமானப் பணிகள் பெருமளவுக்கு நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமுடக்கத்தால் ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் தொழிலாளா்கள் வேலையின்றி மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...