தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகை மாவட்டத்தில் 482 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 482 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:30 pm

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 482 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வியாழக்கிழமை வரை 34,477 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 482 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நாகை மாவட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த வெளி மாவட்டத்தவா் 8 போ் நாகை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 34,951-ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 573 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதனால், மருத்துவமனைகள் மற்றும் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,069 -ஆக உள்ளது.

9 போ் உயிரிழப்பு:

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நாகை மாவட்டத்தவா் 9 பேரின் உயிரிழப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 434 ஆகியுள்ளது.

படுக்கை வசதிகள்:

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சை மையங்களில் 476 படுக்கைகள் காலியாக இருந்தன. 194 ஆக்சிஜன் வசதிக் கொண்ட படுக்கைகளும், 272 ஆக்சிஜன் வசதியில்லாத படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 படுக்கைகளும் காலியாக இருந்தன என்று சுகாதாரத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.