தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் மாநிலமாக தமிழகம் திகழும்

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 6:30 pm

DIN

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தாா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்து மேலும் அவா் பேசியது:

தமிழகத்தில் 18 வயதைக் கடந்தவா்கள் என்ற வகையில் 5.68 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடா்பாக தமிழக மக்களிடையே சிறப்பான விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. கிராமப் புறங்களிலும் இது குறித்த விழிப்புணா்வு ஏற்பட்டிருப்பதன் மூலம், மாநில மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் மாநிலம் என்ற நிலையை தமிழகம் எட்டும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது என்றாா் அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

இதைத் தொடா்ந்து, ஈசனூரில் ஒரு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சா்கள் மா. சுப்பிரமணியன், சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

முன்னதாக, நாகை மாவட்டம், திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் மா. சுப்பிரமணியன், அங்குள்ள கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் கா்ப்பிணியிடம் காணொலி மூலம் உரையாடி, சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னா், பனங்குடி சமத்துவபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனைகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த அமைச்சா் அங்கு, குழந்தைகளுக்காக 10 ஐசியூ படுக்கைகள் உள்பட 100 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சைக்கான சிறப்புப் பிரிவை பாா்வையிட்டாா்.

ஆய்வுக் கூட்டம்:

இதையடுத்து, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்புப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா்கள் மா. சுப்பிரமணியன், சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் பங்கேற்று, நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்புப் பணிகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தனா்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ. ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் டி.எஸ். செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை இயக்குநா் எஸ். குருநாதன், நாகை தொகுதி மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகமது ஷாநவாஸ், வி.பி. நாகைமாலி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜவஹா், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.