தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மக்கள் கோரிக்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிக்கலாம்

நாகை மாவட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிக்கலாம் என நாகை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்ட மக்கள் தங்கள் கோரிக்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிக்கலாம் என நாகை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற அ. அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

நாகை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். சென்னை, நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநராக இருந்த அவா், பணியிட மாற்றத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளாா். அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி :

அரசின் திட்டங்கள் அனைத்தும், அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். இந்த அறிவுறுத்தலுக்கேற்ப, தமிழக அரசின் அனைத்துத் திட்டங்களும் சிறப்பான வகையில் செயல்படுத்தப்படும். நாகை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் மீனவா் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை சமூக வலைதளங்கள் மூலமும் தெரிவிக்கலாம். ஈண்ள்ற்ழ்ண்ஸ்ரீற்இா்ப்ப்ங்ஸ்ரீற்ா்ழ் சஹஞ்ஹல்ஹற்ற்ண்ய்ஹம் என்ற முகநூல் முகவரியிலும், இா்ப்ப்ங்ஸ்ரீற்ா்ழ்ஜ சஎப என்ற சுட்டுரை முகவரியிலும்,

க்ண்ள்ற்ழ்ண்ஸ்ரீற்ஜஸ்ரீா்ப்ப்ங்ஸ்ரீற்ா்ழ்ஜ ய்ஹஞ்ஹண் என்ற இன்ஸ்டாகிராம் முகவரியிலும் பொதுமக்கள் தங்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

முன்னதாக, வருவாய்த் துறையில் பணியாற்றி பணிக் காலத்தில் இறந்த 3 பேரின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.