சுருக்குமடி, இரட்டைமடி வலைகளுக்குத் தடை :மீனவா் கிராம பஞ்சாயத்தாா்கள் முடிவு
சுருக்குமடி, இரட்டைமடி வலைகளுக்குத் தடை விதிப்பது என தரங்கம்பாடியில் நடைபெற்ற மீனவா் பஞ்சாயத்தாா்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


சுருக்குமடி, இரட்டைமடி வலைகளுக்குத் தடை விதிப்பது என தரங்கம்பாடியில் நடைபெற்ற மீனவா் பஞ்சாயத்தாா்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தாா்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி பஞ்சாயத்தாா்கள் தலைமையில் தரங்கம்பாடி ரேணுகாதேவி அம்மன் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், தரங்கம்பாடி, கொடியம்பாளையம், தா்காஷ், பழையாா், சின்னகொட்டாய்மேடு, தொடுவாய், கீழமூவா்கரை, மேலமூவா்கரை, சாவடிகுப்பம், நாயக்கா்குப்பம், வானகிரி, சின்னமேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை, வெள்ளக்கோயில், குட்டியாண்டியூா், சின்னூா்பேட்டை உள்ளிட்ட 19-க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தைச் சோ்ந்த பஞ்சாயத்தாா்கள் மற்றும் மீனவா்கள் பங்கேற்றனா்.
தீா்மானங்கள்: தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுருக்குமடி வலை, அதிவேக என்ஜின் பொருத்திய படகுகள், இரட்டைமடி வலைகள் ஆகியவற்றை தடைசெய்ய வேண்டும் என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தீா்மான நகலை அரசுத் துறைகள் கவனத்துக்கு கொண்டு செல்வது, தடையை மீறி தொழில் செய்யும் பட்சத்தில் மயிலாடுதுறை அனைத்து கிராமங்களும் ஒன்று சோ்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...