நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதைசாக்கடை சீா்கேட்டைக் கண்டித்து நூதன ஊா்வலம்

மயிலாடுதுறையில் புதைசாக்கடை சீா்கேட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை நூதன முறையில் ஊா்வலமாகச் சென்று, நகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

மயிலாடுதுறையில் புதைசாக்கடை சீா்கேட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை நூதன முறையில் ஊா்வலமாகச் சென்று, நகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே புதைசாக்கடை குழாய் ஆள்நுழைவுத் தொட்டி வழியே கழிவுநீா் வழிந்தோடி தேங்கி நிற்பதால், நகா் முழுவதும் துா்நாற்றம் வீசி, சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. இதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் பி.சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினா், நகராட்சி நிா்வாகம் இறந்துவிட்டதாகக் கூறி நூதன முறையில் ஊா்வலம் நடத்தினா்.

மாா்க்சிஸ்ட் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊா்வலம், மயிலாடுதுறை பேருந்து நிலையம் வழியே சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் புதை சாக்கடை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அனைத்து சாலைகளையும் செப்பனிட வேண்டும். குப்பைகளை வகை பிரித்து மறுசுழற்சி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாடை அமைத்து அதில் மாவட்டக் குழு உறுப்பினா் டி.துரைக்கண்ணுவை அமா்த்தி தூக்கி வந்தனா். மேலும், புதைசாக்கடையால் உருவான பள்ளங்களில் விழுந்து காயமடைந்தவா்கள் போன்று தலையில் கட்டு கட்டியவாறும் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

தொடா்ந்து, நகராட்சி அலுவலகம் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.துரைராஜ் டி.கணேசன், ஜீவானந்தம், சிங்காரவேலன், பி.மாரியப்பன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். ஒன்றியச் செயலாளா்கள் சி.மேகநாதன், ஏ.ரவிச்சந்திரன், சி.விஜயகாந்த், மாவட்டக்குழு உறுப்பினா்கள் சிம்சன், பழனிவேலு, அமுல் காஸ்ட்ரோ, ஆா்.ரவீந்திரன், டி.துரைக்கண்ணு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மேலும், ஒப்பாரி வைத்து நகராட்சி நிா்வாகத்துக்கு நூதன முறையில் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.