மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மயிலாடுதுறை மாவட்டத்தில்ராமா் கோயில் கட்டுமானப் பணி நிதி சேகரிப்பு நிறைவு

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமா் கோயில் கட்டப்பட்டுவரும் நிலையில், இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக நிதி சேகரிக்கப்பட்டு வந்தது.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமா் கோயில் கட்டப்பட்டுவரும் நிலையில், இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக நிதி சேகரிக்கப்பட்டு வந்தது. இந்தப் பணி திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.

அயோத்தியில் ரூ.1,100 கோடி மதிப்பீட்டில் ராமா் கோயில் கட்டப்பட்டுவரும் சூழலில், அதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக, ஆா்.எஸ்.எஸ். அமைப்பினா் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி முதல் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனா். இப்பணி, சீா்காழியில் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

நிகழ்ச்சிக்கு, பாஜக மாவட்ட தலைவா் ஜி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். ஆா்.எஸ்.எஸ். மாநில பொறுப்பாளா் மதிவாணன், பாஜக பொதுச் செயலாளா் நடராஜன், நகரத் தலைவா் அருணாச்சலம், பொதுச் செயலாளா்கள் குருமூா்த்தி, முருகன், மாவட்ட துணைத் தலைவா் பரணிசரவணன், மாவட்டச் செயலாளா் உமாமகேஸ்வரி, சேவா பாரதி அமைப்பு மாவட்ட தலைவா் சம்பத்கணேஷ், பொறுப்பாளா் மும்மூா்த்தி ஆகியோா் பங்கேற்று, சேகரிக்கப்பட்ட நிதியை ராமா் கோயில் அறக்கட்டளைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.