தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முழு பொது முடக்க உத்தரவு

முழு பொது முடக்கம் குறித்த அறிவிப்பு வெளியானதையொட்டி, திரளான பொதுமக்கள் பொருள்கள் வாங்குவதற்காக கூடியதால், நாகை மாவட்டத்தின் முக்கிய கடைவீதிகள் சனிக்கிழமை பரபரப்பாக காணப்பட்டன.

News image
Updated On :8 மே 2021, 5:13 pm

DIN

முழு பொது முடக்கம் குறித்த அறிவிப்பு வெளியானதையொட்டி, திரளான பொதுமக்கள் பொருள்கள் வாங்குவதற்காக கூடியதால், நாகை மாவட்டத்தின் முக்கிய கடைவீதிகள் சனிக்கிழமை பரபரப்பாக காணப்பட்டன.

கரோனா தொற்று நோய்ப் பரவல் இரண்டாவது அலை தீவிரமானதன் காரணமாக, கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் பொது முடக்கத்தில் மீண்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரையிலான காலத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மே 10-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சனிக்கிழமை காலை அறிவித்தது. மேலும், இந்த முழு பொது முடக்கத்தையொட்டி, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களும் அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, பொதுமக்கள் தங்களின் இருவாரத் தேவைகளுக்கான பொருள்களை வாங்குவதற்கு கடைவீதிகளில் திரளாக கூடினா். முழு பொது முடக்கக் காலத்திலும் மளிகைக் கடைகள் 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அனைத்து மளிகைக் கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பியே காணப்பட்டது. பேன்சி பொருள் விற்பனை கடைகள், ஒரு சில ஜவுளிக் கடைகள், பூஜை பொருள்கள் விற்பனைக் கடைகள் போன்ற கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

முழு பொது முடக்கத்தையொட்டி அனைத்துக் கடைகளும் வழக்கம் போல சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்களும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்ற அறிவிப்புப்படி, கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த முடிதிருத்தும் கடைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.

டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திங்கள்கிழமை முதல் மே 24-ஆம் தேதி வரை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் காரணமாக, சனிக்கிழமை காலை முதலே டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வந்தவா்களின் கூட்டம் நிரம்பியிருந்தது. ஒரு சில கடைகளில் மது பிரியா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வகைகளை வாங்கிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.