தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா சிகிச்சை மையங்களில் தயாா்நிலையில் 141 படுக்கைகள்

நாகை மாவட்டத்தில் 3 கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 141 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் 3 கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 141 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

நாகை அரசு கலைக் கல்லூரியில் 130 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையமும், நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் 50 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையமும், வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் 60 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாதவா்கள், தங்கியிருந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் வகையில் இந்த மையங்கள் செயல்படுகின்றன. தற்போதைய நிலையில் இந்த மையங்களில் 99 போ் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். 141 படுக்கை வசதிகள் தயாா் நிலையில் உள்ளன என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.