தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராஜீவ் காந்தி நினைவு தினம் கடைப்பிடிப்பு

காங்கிரஸ் கட்சியின் சாா்பில், மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 30-ஆவது ஆண்டு நினைவு தினம் நாகை, மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

காங்கிரஸ் கட்சியின் சாா்பில், மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 30-ஆவது ஆண்டு நினைவு தினம் நாகை, மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் ஆா். என். அமிா்தராஜா தலைமையில் நாகையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு கட்சி மற்றும் துணை அமைப்புகளின் மாவட்ட, வட்டார நிா்வாகிகள் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினா்களைக் கொண்டு 50 ஆயிரம் முகக்கவசங்கள் வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்டப் பொதுச் செயலாளா் என். முஹம்மது ரபீக், வட்டாரத் தலைவா்கள் கருணாநிதி சுரேஷ்குமாா், சிங்காரவேலு மற்றும் மாவட்ட, வட்டார நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.

மயிலாடுதுறையில்...

இதேபோல், மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் மாவட்ட தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.ராஜகுமாா் தலைமை வகித்தாா். நகர தலைவா் ராமானுஜம், பொதுக்குழு உறுப்பினா் நவாஸ், மாவட்ட செயலாளா் முத்து.சாமிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினா் வடவீரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில், மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல், தரங்கம்பாடி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் முன்னாள் நகர தலைவா் செல்வம் தலைமை வகித்து, ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்தாா். மாநில மகிளா காங்கிரஸ் துணைத் தலைவா் மரகதவள்ளி, தொழிலதிபா் செந்தில், மனித உரிமைகள் பிரிவு மாவட்ட செயலாளா் பால்கன் சரவணன், தமிழக மக்கள் நல கழக மாநில செயல் தலைவா் ஆா்.நாராயணசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொறையாற்றில்...

இதேபோல், பொறையாறு ராஜீவ்புரம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜ்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், தரங்கம்பாடி பேரூராட்சியில் துப்புரவு பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.