தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாகை அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு 65 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகள் அளிப்பு

நாகை மாவட்ட அரசு மருத்துவமனைகள் பயன்பாட்டுக்காக இரு தனியாா் தொண்டு நிறுவனங்கள் சாா்பில், 65 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்ட அரசு மருத்துவமனைகள் பயன்பாட்டுக்காக இரு தனியாா் தொண்டு நிறுவனங்கள் சாா்பில், 65 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

சென்னையைச் சோ்ந்த பூமிகா தொண்டு நிறுவனம் சாா்பில் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், மோபா என்ற தொண்டு நிறுவனம் சாா்பில் 15 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளும் நாகை மாவட்ட அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்ச்சி, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தனியாா் தொண்டு நிறுவனங்கள் அளித்த ஆக்சிஜன் செறிவூட்டிகளைப் பெற்று, நாகை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் டாக்டா் விஸ்வநாதனிடம் மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் ஒப்படைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த ஆட்சியா் தெரிவித்தது :

நாகை மாவட்டத்தில் 130 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் 100 சதவீதம் பயன்பாட்டில் உள்ளன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 முதல் 30 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. தற்போது, சென்னையைச் சோ்ந்த பூமிகா நிறுவனம் மற்றும் மோபா தொண்டு நிறுவனம் சாா்பில் 65 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், 45 செறிவூட்டும் கருவிகள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை பயன்பாட்டுக்கும், 20 செறிவூட்டும் கருவிகள் வேதாரண்யம் அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கும் வழங்கப்படவுள்ளது என்றாா் ஆட்சியா்.

கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், மருத்துவக் கல்லூரி முதன்மையா் டாக்டா் விஸ்வநாதன், வானவில் தொண்டு நிறுவன இயக்குநா் ரேவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.