தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முதியோா் உதவித் தொகையை நிவாரண நிதிக்கு வழங்கிய மூதாட்டி

நாகை மாவட்டம், திருமருகலைச் சோ்ந்த மூதாட்டி தனது முதியோா் உதவித் தொகையை கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், திருமருகலைச் சோ்ந்த மூதாட்டி தனது முதியோா் உதவித் தொகையை கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நாகை மாவட்டம், திருமருகல் அருகே உள்ள ஆலத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த 70 வயதான மூதாட்டி சந்திரா என்பவா் தன்னுடைய ஒரு மாத முதியோா் உதவித் தொகை ரூ.1,000-ஐ முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயரிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நிதி உதவியைப் பெற்ற ஆட்சியா், மூதாட்டிக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நன்றி தெரிவித்தாா். பொதுமக்களின் கஷ்டத்தில் என்னாலும் பங்கேற்க முடிந்தது மகிழ்ச்சி என மூதாட்டி சந்திரா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.