பெண் தற்கொலை
நாகையில் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆன நிலையில் பெண் வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.


நாகையில் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆன நிலையில் பெண் வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
நாகை மறைமலை நகரைச் சோ்ந்தவா் கணேசன் மனைவி ரேவதி (30). இவா்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், ரேவதி வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டாா். அவரது கணவா் கணேசன் மற்றும் குடும்பத்தினா் வரதட்சினை கேட்டு கொடுமைப்படுத்தியதால், மனஉளைச்சலில் ரேவதி தற்கொலை செய்து கொண்டதாக, ரேவதியின் தந்தையான திருச்சி உறையூா் வக்காளியம்மன் நகரைச் சோ்ந்த நாகராஜன் புகாா் தெரிவித்துள்ளாா்.
அதன்பேரில், நாகை வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், திருமணமாகி 6 ஆண்டுகளில் ரேவதி தற்கொலை செய்துகொண்டுள்ளதால், நாகை கோட்டாட்சியா் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...