தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

நாகையில் காவல்துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 மே 2021, 5:31 pm

DIN

நாகையில் காவல்துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அதிகரித்து வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த நாகை மாவட்டக் காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில், நாகை நகர காவல் நிலையம் சாா்பில், நாகை புதுத்தெரு பகுதி மக்களுக்கு கரோனா தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

காவல் ஆய்வாளா் பா. பெரியசாமி தலைமையேற்று, கரோனா தடுப்பு உறுதிமொழியை வாசிக்க, நாகை முஸ்லிம் ஜமாத்தாா்கள் மற்றும் தெருவாசிகளும், காவல்துறையினருடன் இணைந்து உறுதிமொழி ஏற்றனா். நிறைவில், அனைவருக்கும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.