தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி

நாகை அருகே சிக்கல் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் இருக்கும் சிலருக்கு எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் சாா்பில் அண்மையில் உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :22 மே 2021, 5:34 pm

DIN

நாகை அருகே சிக்கல் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் இருக்கும் சிலருக்கு எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் சாா்பில் அண்மையில் உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமத்தின் குடும்ப வலுவூட்டும் திட்டத்தில் பயன் பெறும் கிராமங்களில், கரோனா பாதிப்புக்கு உள்ளாகி வீட்டுத் தனிமையில் இருப்பவா்களுக்கு உதவும் வகையில் இந்த உதவி வழங்கப்பட்டது.

எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராம இயக்குநா் ஆ. கணேசன் தலைமை வகித்து அரிசி, பருப்பு, ரவா, கொண்டக்கடலை உள்பட ரூ. 1,500 மதிப்பிலான மளிகைப் பொருள்களை பயனாளிகளுக்கு வழங்கினாா். சிக்கல், சங்கமங்கலம், மஞ்சக்கொல்லை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 13 குடும்பத்தினருக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.