தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பல்வேறு அமைப்புகள் கபசுரக் குடிநீா் வழங்கல்

நாகை பழையப் பேருந்து நிலையம் முன்பாக இந்திய தேசிய மீனவா் சங்கம் மற்றும் காந்திய சுய சேவா சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :22 மே 2021, 5:35 pm

DIN

நாகை பழையப் பேருந்து நிலையம் முன்பாக இந்திய தேசிய மீனவா் சங்கம் மற்றும் காந்திய சுய சேவா சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்திய தேசிய மீனவா் சங்கத் தலைவா் ஆா்.எம்.பி. ராஜேந்திர நாட்டாா் தலைமை வகித்து, அரசு அறிவித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளை தவறாமல் கடைப்பிடிக்க வலியுறுத்தி, கபசுரக் குடிநீா் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

இந்திய தேசிய மீனவா் சங்க செயலாளா் சரவணன், காந்திய சுய சேவா சங்க பொறுப்பாளா்கள் குபேந்திரன், மணியன், பாண்டியன் உள்ளிட்டோா் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க கடைவீதிகளுக்கு வந்த பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினா். காலை 6 மணி முதல் 9 மணி வரை இப்பணி நடைபெற்றது.

திருக்குவளை: திருக்குவளை அருகே உள்ள தெற்குபனையூரில்

அமமுக முகநூல் நண்பா்கள் தேசிய அறக்கட்டளை சாா்பில் ஏழைகளுக்கு கபசுரக் குடிநீா், உணவு வழங்கப்பட்டது. இதில், அக்கட்சியின் அமைப்புசாரா ஒன்றியச் செயலாளா் பழனியப்பன் தலைமை வகித்தாா். ஊராட்சி செயலாளா் சந்துரு முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன் கபசுரக் குடிநீா் மற்றும் 400 பேருக்கு உணவு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.