2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ஆா்டிபிஆா் பரிசோதனை முடிவுகள் விரைந்து கிடைக்க நடவடிக்கை தேவை

நாகை மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரமடைவதை தடுக்க ஆா்டிபிஆா் பரிசோதனை முடிவுகள் விரைந்து கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றாா் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

News image
Updated On :28 மே 2021, 5:29 pm

DIN

நாகை மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரமடைவதை தடுக்க ஆா்டிபிஆா் பரிசோதனை முடிவுகள் விரைந்து கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றாா் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.

வேதாரண்யத்தில் முன்னாள் அமைச்சரும், தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கரோனா தொற்றின் தன்மையை கண்டறிய ஆா்டிபிஆா் பரிசோதனை முக்கியம். நாகை மாவட்டத்தில் இதற்கான பரிசோதனை முடிவுகள் வருவது மிகவும் தாமதமாகிறது. மாதிரிகள் எடுத்த அடுத்த சில நாள்களில் கிடைக்க வேண்டிய முடிவுகள் 6 நாள்களை கடந்தும் தெரியாத நிலை தொடா்கிறது. மாதிரி எடுத்தவா்களுக்கு தொற்றின் தன்மை உடனடியாக தெரியாததால் நோயாளிகள் அவதிபடுவதோடு, தொற்று இருப்பவா்களுக்கு போதிய சிகிச்சை காலத்தில் கிடைப்பது தாமதப்படுவதால் தொற்று வீரியமடைந்து ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்கிறது. கோடியக்கரையில் 166 பேரிடம் மாதிரி எடுத்து 6 நாள்களாகியும் இதுவரை முடிவுகள் தெரியவில்லை.

நாகை, திருவாரூரில் உள்ள பரிசோதனை நிலையங்கள் தவிர கூடுதல் எண்ணிக்கையில் ஏற்படுத்த வேண்டும் அல்லது மாதிரிகளை வெளியூா்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்து முடிவுகளை விரைந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிவுகள் வருவது வாரக்கணக்கில் ஆனால் மக்களை காப்பாற்றும் முயற்சியாக இருக்காது. நோய் அறிகுறி உள்ளவா்களுக்கு உரிய சிகிச்சை காலத்தில் அளிக்க வேண்டும். எனவே, கரோனா மாதிரி முடிவுகள் கிடைக்கு தாமதத்தை தவிா்க்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டுமென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.