தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா தடுப்பூசி முகாம்

நாகை அருகேயுள்ள அக்கரைப்பேட்டையில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2021, 5:28 pm

DIN

நாகை அருகேயுள்ள அக்கரைப்பேட்டையில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அக்கரைப்பேட்டையில் நடைபெற்ற முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் அழியாநிதி மனோகரன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் ஏ. ஆா். முஹம்மது உமா், வட்டார வளா்ச்சி அலுவலா் மஞ்சுளா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் 18 முதல் 44 வயதுக்குள்பட்ட 720 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். மருத்துவ அலுவலா் இ. பிரவீன், சுகாதார ஆய்வாளா்கள், களப்பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டிருந்தனா். இதேபோல், பொரவச்சேரியில் நடைபெற்ற முகாமில் 18 முதல் 44 வயதுக்குள்பட்ட 184 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். சுகாதார ஆய்வாளா் சுந்தானந்த கணேஷ் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

வெண்மணியில்: வெண்மணி ஊராட்சியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமுக்கு ஊராட்சித் தலைவா் வி. மகாதேவன் தலைமை வகித்தாா். கீழ்வேளூா் வட்டார வளா்ச்சிஅலுவலா்கள் மீனா, தியாகராஜன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இம்முகாமில் 18 முதல் 44 வயதுக்குள்பட்ட 252 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். மருத்துவ அலுவலா்கள் தீபிகா, சந்திரமௌலி ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா்கள்முகாமில் பணியமா்த்தப்பட்டிருந்தனா். ஊராட்சித் துணைத் தலைவா் டி.சந்திரா, ஊராட்சி செயலாளா் கே. ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.