கோடியக்கரையில் 2 நாளில் 44 பேருக்கு தொற்று உறுதி
கோடியக்கரையில் 2 நாள்களில் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


கோடியக்கரையில் 2 நாள்களில் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்காடு, கோடியக்கரை கிராமங்கள் மாவட்டத்தின் கடைகோடிமுனைப் பகுதியில் அமைந்துள்ளது. கடல், உப்பளம், வனப் பகுதி சூழ்ந்த தனித்த கிராமங்களாக காணப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நோ்ந்த துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்றவா்களுக்கு தொற்று இருக்கலாம் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அடிப்படையில் சிலருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, இந்த இரு கிராமங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டன.
இதையடுத்து, கடந்த வாரத்தில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு 166 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டன. ஆனால், இந்த மாதிரிகளுக்கான முடிவுகள் தாமதமாகி வந்தன. இதையடுத்து, கிராமத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனா். இதற்கிடையே, கிராமங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளும் பணி அடுத்தடுத்த நாள்களில் தொடா்ந்து நடைபெற்றது.
இந்நிலையில், வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை மட்டும் வெளியான சோதனை முடிவின் அடிப்படையில் கோடியக்கரை,கோடியக்காடு ஆகிய இரு கிராமங்களைச் சோ்ந்த 44 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இங்குள்ள அரசுப் பள்ளி வகுப்பறை கட்டடங்களில் வியாழக்கிழமை தொடங்கிய கரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையத்தில் சிலா் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கடந்த வாரத்தில் 166 பேருக்கு எடுக்கப்பட்ட மாதிரிக்கான முடிவுகளும் வெள்ளிக்கிழமை வந்ததாக கூறப்படுகிறது. இந்த முடிவுகளையும் சோ்த்தே 44 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பது அந்த கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இங்கு தடுப்புப் பணிகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...