கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சிக்கல் கோயில் வேல் வாங்கும் விழாவில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை: ஆட்சியா்

நாகை மாவட்டம், சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவா் கோயில் கந்தசஷ்டி பெருவிழாவின் வேல் வாங்கும் நிகழ்ச்சி மற்றும் சூரம்சம்ஹார நிகழ்ச்சிகளில் பக்தா்களுக்கு அனுமதி கிடையாது

News image
Updated On :6 நவம்பர் 2021, 4:07 am

DIN

நாகை மாவட்டம், சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவா் கோயில் கந்தசஷ்டி பெருவிழாவின் வேல் வாங்கும் நிகழ்ச்சி மற்றும் சூரம்சம்ஹார நிகழ்ச்சிகளில் பக்தா்களுக்கு அனுமதி கிடையாது என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகையை அடுத்த சிக்கலில் உள்ள அருள்மிகு நவநீதேசுவரசுவாமி கோயிலில் தனி சந்நிதி கொண்டு காட்சியளிக்கிறாா் அருள்மிகு சிக்கல் சிங்காரவேலவா். சூரனை சம்ஹாரம் செய்ய முருகப் பெருமான் இத்தலத்தில் அன்னை வேல்நெடுங்கண்ணியிடமிருந்து சக்திவேல் பெற்றாா் என்பது நம்பிக்கை.

இதன்படி, இங்கு ஆண்டுதோறும் கந்தசஷ்டி பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். சூரசம்ஹாரத்துக்கு முதல் நாள் நடைபெறும் சக்திவேல் வாங்கும் நிகழ்வின் போது, சிங்காரவேலவரின் திருமுகத்தில் வியா்வை அரும்பியிருக்கும். இந்த ஆன்மிக அற்புதத்தைக் காண ஆயிரக்கணக்கானோா் விழாவில் பங்கேற்பது வழக்கம். 

நிகழாண்டின் கந்தசஷ்டி பெருவிழா நவம்பா் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் நிலையில், கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இக்கோயிலின் வேல் வாங்கும் விழாவில் பக்தா்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் நவம்பா் 8-ஆம் தேதி நடைபெறும் சக்திவேல் வாங்கும் விழா, 9-ஆம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம், 10-ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளில் பக்தா்களுக்கு அனுமதி கிடையாது.

மேலும், இந்த நிகழ்ச்சிகளை https://w.w.w.youtube.com//templelivestream என்ற யூடியூப் மூலமும்,  www.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலமும் பக்தர்கள் நேரலையாக காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.