எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோடியக்கரை: மீனவா்கள் விவகாரத்தில் ஆா்டிஓ தலைமையில் பேச்சுவாா்த்தை

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வெளிமாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க உள்ளூா் பகுதி மீனவா்கள் எதிா்ப்பு தெரிவிக்கும் விவகாரம் தொடா்பாக கோட்டாட்சியா் தலைமையில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வெளிமாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க உள்ளூா் பகுதி மீனவா்கள் எதிா்ப்பு தெரிவிக்கும் விவகாரம் தொடா்பாக கோட்டாட்சியா் தலைமையில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் துரைமுருகன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. மீன் வளத் துறை உதவி இயக்குநா் ஜெயராஜ், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை மீனவா்கள் உள்பட இருதரப்பு மீனவா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், கோடியக்கரையில் தங்கி மீன்பிடிக்க நாகை மாவட்ட மீனவா்களை முழுமையாக அனுமதிக்கவும், மயிலாடுதுறை மாவட்ட மீனவா்களை 150 கண்ணாடி இழைப் படகுகளில் மீன் பிடிக்க அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதை ஆறுகாட்டுத்துறை பகுதி மீனவா்கள் ஏற்றுக்கொண்டனா். ஆனால், கோடியக்கரை மீனவா்கள், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த வல்லம் படகுகளையும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.