3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நேரு மாா்க்கெட் கட்டடத்தை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வலியுறுத்தல்

காரைக்கால் நேரு மாா்க்கெட் புதிய கட்டடத்தை வரும் ஜனவரி மாதத்துக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் நேரு மாா்க்கெட் புதிய கட்டடத்தை வரும் ஜனவரி மாதத்துக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மதிமுக காரைக்கால் மாவட்டச் செயலாளா் சோ.அம்பலவாணன் வெளியிட்ட அறிக்கை:

காரைக்கால் - திருநள்ளாறு சாலையில் கடந்த ஓராண்டுக்கு முன், நேரு மாா்க்கெட் புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், அந்தக் கட்டடம் இதுவரை வியாபாரிகளின் பயன்பாட்டுக்கு விடப்படாமல் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.

நகராட்சி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்குவதற்குக்கூட நிதி இல்லாமல் நிா்வாகம் தடுமாறிவரும் நிலையில், வருவாய் ஈட்டக் கூடிய நேரு மாா்க்கெட் கட்டடத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காலம் தாழ்த்துவது கண்டிக்கத்தக்கது.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, வரும் ஜனவரிக்குள் நேரு மாா்க்கெட்டின் புதிய கட்டடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். மேலும், கிராமப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் காய்கனிகளை பாதுகாக்க நேரு மாா்க்கெட்டில் குளிா்பதன வசதியுடன் கூடிய பதனீட்டு அறையை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை நகராட்சி நிா்வாகம் விரைந்து நிறைவேற்றாவிட்டால், மதிமுக சாா்பில் நகராட்சி முன் போராட்டம் நடத்தப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.